search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்போர் பட்டியல்"

    ரெயில்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள ரெயில்வே அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. #IRCTC #WaitlistedTrainTicket
    புதுடெல்லி:
     
    ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு முன்பதிவு செய்யும் போது பெரும்பாலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்கும். இதனால் டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருக்கும். டிக்கெட் உறுதியாவது குறித்து ரெயில் புறப்படும் அன்றுதான் பெரும்பாலும் தெரியவரும்.
    இந்த முறை பயணிகளுக்கு பெரும் சிரமாம இருந்து வருகிறது. 

    இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டுவர ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதியின் மூலம், முன்பதிவு செய்யும் போதே டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை இணையதளமே யூகித்து சொல்லிவிடும். 

    இந்த புதிய வசதி குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் புதிதாக மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை பயணிகள் உடனே தெரிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
     
    இந்த புதிய வசதி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. #IRCTC #WaitlistedTrainTicket
    ×